எம்.பி கனிமொழியின் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்...

எம். பி கனிமொழியின் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்...

Jan 5, 2025 - 15:12
Jan 5, 2025 - 15:15
 0  21
எம்.பி கனிமொழியின் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்...

தூத்துக்குடி:

கனிமொழி எம்பியின் 57.வது பிறந்தநாளை முன்னிட்டு 

 மாபெரும் இலவச மருத்துவ முகாமை மேயர் என்,பி, ஜெகன் பெரியசாமி, துவக்கி வைத்தார்.

தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் உள்ள கிங் ஆப் கிங்ஸ் பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகர திமுகதுணை செயலாளர் மாநகராட்சி பணிகள் குழுத் தலைவருருமான கீதா எம்,முருகேசன் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.

இதில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின்  

 தூத்துக்குடி மாநகர மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி கொண்டாடினார்,

இலவச மருத்துவ முகாம்

மதுரையின் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை வாசன் ஜ கேர் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் சிறப்பு மருத்துவர்கள் குழு பங்கேற்று பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.

 இந்த முகாமில் பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

"இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் உடல்நலனை மேம்படுத்துவதே எங்களது முதன்மை நோக்கம். இது போன்ற மருத்துவ முகாம்கள் மூலம் ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவ சேவையை பெற முடிகிறது," என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்,பி,ஜெகன் பெரியசாமி தமது உரையில் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி கழகச் செயலாளர் ஜெயக்குமார், முன்னிலையில்மாநகர தி.மு.க துணைச்செயலாளரும், மாநகர பணிகள் குழுத் தலைவருமான கீதா முருகேசன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,  

இதில் 14.வது வார்டு திமுக முக்கிய பிரமுகர்கள் ஆகாஷ் மாரிராஜ் ,மோகன் மற்றும் பகுதி செயலாளர் ஜெயக்குமார் அந்தோனி முத்துராஜ், ஞானக்கண், லட்சுமி, பந்தல் முருகன் முருகேசன், ஆட்டோ குமார், சங்கர், செல்வகுமார், படையப்பா, முனியசாமி, மகேஷ் .உட்ப்பட

மாவட்ட, மாநகர திமுகநிர்வாகிகள் மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர்,மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமை வெற்றிகரமாக நடத்தினர்.

இந்த மருத்துவ முகாமில் புதிய பேருந்து நிலையத்தின் செருப்பு கடை அதிபரும் கிங்ஸ்லிரமேஷ்.உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நோயாளிகளுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த சேவை முகாம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow