விடிய விடிய வாகன சோதனை: 400 வழக்குகள் பதிவு..!!

விடிய விடிய வாகன சோதனை: 400 வழக்குகள் பதிவு..!!

Jan 20, 2025 - 12:14
Jan 20, 2025 - 12:17
 0  24
விடிய விடிய வாகன சோதனை:  400 வழக்குகள் பதிவு..!!

தென்காசி:
புளியங்குடி சப் டிவிஷன் பகுதியில் விடிய விடிய வாகன சோதனை 400 வழக்குகள் பதிவு:

தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, விடிய விடிய  போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில்   திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள  தென்காசி ஆலங்குளம் சங்கரன்கோவில் புளியங்குடி காவல் சப் டிவிஷன் பகுதிகளில்  வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.


கடையநல்லூர்  பகுதியில் புளியங்குடி துணை  காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவல் ஆய்வாளர் ஆடிவேல் வாகனம் தணிக்கையில் ஈடுபட்டனர் இரவு 10 மணிக்கு தொடங்கி காலை வரையில்  நடைபெற்றது.

புளியங்குடி சப் டிவிசனுக்கு உட்பட்ட கடையநல்லூர், சொக்கம்பட்டி, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, சேர்ந்தமரம் ஆகிய பகுதிகளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள், தலை கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் உள்பட 400 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக டிஎஸ்பி வெங்கடேசன் தெரிவித்தார் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow