தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரம் நகரத் தலைவர் திவ்யா ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.இந்த தெருமுனை பிரச்சாரத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேனி மாவட்டத்தலைவர் ராஜபாண்டி பேசும்போது "தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கை வேண்டும், இதனால் பள்ளிக்குழந்தைகளின் கல்வி திறன் அதிகாரிக்கும். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மகன் மூன்றாவது மொழியாக பிரெஞ்ச் மொழியை கற்று வருகிறார். ஆனால் இங்குள்ள ஏழை எளிய மக்களின் குழந்தைகள் மூன்றாவது மொழியான இந்தி மொழியை கற்க கூடாதா? திராவிட மாடல் அரசான தி.மு.க மாவட்ட ஒன்றிய செயலாளர்களின் குழந்தைகள் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை கற்று வருகிறார்கள். அதே போல் திமுக பிரமுகர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி மொழியை பாடமாக வைத்துள்ளனர். டாஸ்மாக் துறையில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. மக்கள் முன் அதற்கான தண்டனை நிச்சயம் துறை சார்ந்த அமைச்சருக்கு கிடைக்கும்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களான தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்க ரூ.7 கேடியும், எஸ்ஸி. எஸ்.டி பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம், 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்,நகர்ப்புற குடிநீர் மற்றும் தூய்மை பணிக்கு ரூ.1 இலட்சம் மோடி நீதி ஒதுக்கீடு போன்ற திட்டங்களை செயல்படுத்துவார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. எனவே மூன்றாவது முறை மட்டுமல்லாமல் இனி அனைத்து முறையும் மோடி தான் இந்திய பாரதப் பிரதமர் " என்று பேசினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு சன்னாசி பாபு, பாராளுமன்ற முழு நேர ஊழியர் முருகன், முன்னாள் நகர தலைவர் முத்துப்பாண்டி, நகர பொதுச்செயலாளர் சோமசுந்தர சரவணன், நகரத் துணைத் தலைவர் நாராயணன், நகர பொருளாளர் ராஜசேகர், மாவட்ட நிர்வாகிகள் வினோத்குமார் மோகன்தாஸ் பாண்டியராஜன் சிவகுமாரன் உள்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தெருமுனை பிரசாரத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தாமரை சேவகன் ராஜசேகர் நன்றி கூறினார்.