46 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு...
46 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு...
பழனி:
பழனி முருகன் கோயிலில் 46 லட்சம் செலவில் செய்யப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு ,சக்கரபாணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவில் பயன்படுத்துவதற்காக புதிய தேர் செய்யப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 46 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர் செய்யும் பணி கடந்த ஒரு வருடம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில் 20 டன் எடையில் மரத்தினால் புதிய தேரை வடிவமைத்துள்ளனர். இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நிகழ்ச்சி பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரில் கலசம் வைக்கப்பட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள், பக்தர்கள் பலரும் தேரின் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
What's Your Reaction?






