காவல் நிலையம் முற்றுகை போராட்டம்..!!
காவல் நிலையம் முற்றுகை போராட்டம்..!!

கரூர்:
மணல் திருட்டு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் சனப்பிரட்டி பகுதியில் சவுடு மண் கடத்தப்பட்டு வந்த லாரியை சாமானிய மக்கள் நலக் கட்சி மாநில பொது செயலாளர் குணசேகரன் பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் மணல் கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை எனக்கூறி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. காவல் நிலையம் அருகில் மாநில பொது செயலாளர் குணசேகரன் தலைமையில் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
What's Your Reaction?






