ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை கல்லூரியில் புத்தாண்டை ஒட்டி சிறந்த சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது

ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை கல்லூரியில் புத்தாண்டை ஒட்டி சிறந்த சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது

Jan 1, 2025 - 16:45
 0  8
ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை கல்லூரியில்  புத்தாண்டை ஒட்டி சிறந்த சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது

ஆங்கில புத்தாண்டை ஒட்டி சிறந்த சாதனையாளர் விருது வழங்கும் விழா. 

சேலம் மாவட்டம் ஓமலூர் பத்மவாணி மகளிர் கலைக் கல்லூரியில் 2025 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பத்மவாணி மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் விழாக் குழுவின் சார்பில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் சின்னத்திரை புகழ் திரைப்பட நடிகர் பேராசிரியர் முனைவர் கோ பழனி அவர்களின் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ் விழாவில் தாரமங்கலம் ஒன்றியம் மானத்தாள் ஊராட்சி ஓலைப்பட்டியை சேர்ந்த எம்.ராஜா ஆசிரியர்.(பணி நிறைவு) அவர்களுக்கு கல்வி பணி( ம) சமூக சேவையை பாராட்டி கல்வித்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த சமூக சேவகர் விருது தாரை வெல்டிங் கண்ணன், ஆர் லட்சுமணன் அவர்களுக்கு விழா குழுவினரால் வழங்கப்பட்டது. விழாவில் பத்மவாணி கல்லூரி தாளாளர் சத்தியமூர்த்தி கல்லூரி முதல்வர் ஹரிகிருஷ்ணராஜ் விழா ஒருங்கிணைப்பாளர் தாரமங்கலம் ஆசிரியர் தங்கதுரை நிர்வாக அதிகாரி முத்துக்குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அதன் பிறகு சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow