செம்பனூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்...

செம்பனூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்...

Mar 17, 2025 - 15:16
Mar 17, 2025 - 18:46
 0  40
செம்பனூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்...
சிவகங்கை:
சிவகங்கை அருகே செம்பனூரில் மாசி களரியை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.  தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் போட்டியை கொடியசைத்து  துவக்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 710 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக  அவிழ்த்து விடப்பட்டது. ஒரு சுற்றுக்கு 50வீரர்கள் என 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

இதில் மதுரை மாவட்டம் சல்லிகோடங்கிபட்டி புதூர் பகுதியை சேர்ந்த  R15 ஆறுமுகம் என்பவர் காளை ஜல்லிக்கட்டு வீரர்களை சிதறடித்து பல்வேறு பரிசுகளை தட்டி சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது, பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு டூவீலர், கட்டில், பீரோ, டேபிள், எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow