கடையநல்லூரில் ஆட்டோக்களுக்கு அடையாள எண்..!

கடையநல்லூரில் ஆட்டோக்களுக்கு அடையாள எண்..!

Jan 8, 2025 - 17:30
Jan 8, 2025 - 17:37
 0  34
கடையநல்லூரில் ஆட்டோக்களுக்கு அடையாள எண்..!

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களையும் வரவழைக்கப்பட்டு அந்த ஆட்டோகளுக்கு பிரத்யோக அடையாள எண் வழங்கப்பட்டது.

கடையநல்லூரில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது ஒவ்வொரு நிறுத்தங்களிலும் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன அது தவிர ஆட்டோ நிறுத்தமில்லாத ஆட்டோக்களும் உள்ளது.

இந்த ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் எளிதில் ஆட்டோகளை அடையாளம் காணும் விதத்தில்

ஆட்டோக்களுக்கு பிரத்தியோக அடையாள எண்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழங்கினார்.

அப்பொழுது ஒவ்வொரு ஆட்டோக்களிலும் உள்ள ஆவணங்கள் முறையாக உள்ளதா என ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ், லைசன்ஸ் அனைத்தும் சரிபாக்கப்பட்டு அவர்களுக்கு ஆட்டோ எண்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பயணிகள் ஆட்டோக்களில் தவறவிட்ட பொருட்கள் ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்கின்ற பொழுது குற்ற செயல்கள் நடைபெற்றால் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் காண்பதற்கு இந்த எண்கள் வழங்கப்பட்டதாக காவல் ஆய்வாளர் ஆடிவேல் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow