உத்தமபாளையத்தில் தேர் செல்லும் சாலையை செப்பனிடக்கோரி இந்து முன்னணி இயக்கத்தினர் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்...

உத்தமபாளையத்தில் தேர் செல்லும் சாலையை செப்பனிடக்கோரி இந்து முன்னணி இயக்கத்தினர் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்...

Mar 5, 2025 - 12:30
 0  3
உத்தமபாளையத்தில் தேர் செல்லும் சாலையை செப்பனிடக்கோரி இந்து முன்னணி இயக்கத்தினர் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்...
தேனி:
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் வருகின்ற 12-ம் தேதி உலகப் புகழ்பெற்ற தென் காலகஸ்தி என அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை திருக்கோவிலில் மாசி திருத்தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.அந்தத் திருவிழாவின் போது தேர்ச்செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து நிலையில் சேதம் அடைந்து உள்ளதால் அவற்றில் தேர் சென்றால் தேர் செல்வது சிரமமான ஒன்றாகும் என்பதற்காக அந்த சாலையை உடனே செப்பணிட வேண்டும் என கோரி உத்தமபாளையம்  தேனி மாவட்ட இந்து முன்னணி இயக்கத்தினர்  உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.இந்தப் போராட்டத்தின் போது பேரூராட்சி அலுவலகத்தில் முன்பாக அமர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டமானது இந்து முன்னணி தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்செல்வா தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர்  தங்க பொன் ராஜா மற்றும் தேனி மாவட்ட வழக்கறிஞர் மோடி கார்த்திக் ஆகியோர் தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையானது மதுரை மண்டல செயற்பொழிவாளர் ராஜாராம், தலைமையில், பேரூராட்சிகளின் துணை இயக்குனர் பால்பாண்டியன், முன்னிலையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் உடனடியாக சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்செல்வா கூறுகையில் ஏழாம் தேதிக்குள் சாலையை சரி செய்து தருகிறோம் என்று கூறினார்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் 7ஆம் தேதி இரவு பேரூராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow