சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்...
சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்...
தஞ்சாவூர் :
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து யூஜிசி நகலை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யூஜி சி யின் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற ஆர்எஸ்எஸ் நபர்களை திணிக்கின்ற முயற்சி துணைவேந்தர் தேர்தல் குழுவை ஆளுநரை நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் நகல் அரிப்பு போராட்டம் நடைபெற்ற வருகிறது.
இதனை அடுத்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென மாணவர்கள் 38 பக்கங்களை கொண்ட யுஜிசி அறிவிப்பு நகலை தீயிட்டுக் கொளுத்தி தங்களுடைய எதிர்ப்பை மாணவர்கள் பதிவு செய்தனர்.
பின்பு போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி தீயிடப்பட்ட நகலை தண்ணீர் எடுத்து வந்து அணைத்தனர் இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
What's Your Reaction?






