அரசு கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா...

அரசு கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா...

Jan 9, 2025 - 21:43
Jan 9, 2025 - 21:58
 0  26
அரசு கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா...
அரசு கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா...
அரசு கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா...
அரசு கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா...

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் அரசு கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா, பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர், பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்து மண்பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்,

இக்கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவாக வண்ண கோலமிட்டு, கரும்பால் தோரணம் கட்டி,சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து, மண் பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து, பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என மாணவிகள் குழவை சத்தம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கிராமிய பாடலுக்கு கும்மியாட்டம் ஆடியும், திரைஇசை பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடியும், சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் மாணவிகள் சமுதாய பொங்கல் விழாவினை உற்சாகமாக கொண்டாடினார்கள், மேலும் ஜல்லிகட்டு காளை கொண்டு வரப்பட்டு மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர், முன்னதாக முன்னாள் மாணவர்கள் மற்றும் மும்மதத்தை சார்ந்த பிரமுகர்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து மாணவிகளிடம் வழங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow