திண்டுக்கல் மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டி...
திண்டுக்கல் மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டி...

திண்டுக்கல்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 14 வட்டார ஒன்றியங்களில் ஒன்றிய அளவிலான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பன்முக கலாச்சார போட்டிகள் கடந்த வாரத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 14 ஒன்றியங்களில் நடந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில்
மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியை தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குனர் சதீஷ்பாபு தலைமையில் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.உதவி திட்ட அலுவலர் ராம்குமார் (பிறத்துறை இணைப்பு) திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த குழுவினர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
கோலப்போட்டி, கயிறு இழுத்தல் ,கபடி ,கோகோ, கால்பந்து ஆகிய போட்டியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்போட்டிகளை 14 வட்டார இயக்க மேலாளர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.அனைத்துப் போட்டியிலும் மாவட்ட அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு சான்றிதலுடன் கூடிய பரிசு மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற குழுவினருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
What's Your Reaction?






