பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
பழனி:
பொங்கல் விடுமுறையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம்.
அதிகாலை நான்கு மணிக்கே சன்னதி திறக்கப்பட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்தும் ,மலை அடிவாரம், பாதவிநாயகர் கோவில் ,கிரிவலபாதைகளில் அலகு குத்தியும் ,காவடிகள் எடுத்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்லவும் ,படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மலை கோவிலுக்கு சென்று சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது . மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?






