133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றது...
133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடைபெற்றது...

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழாவினைக் கொண்டாடும் விதமாக, சேலம் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. பிருந்தாதேவி, பார்வையிட்டார்கள். உடன் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ.அபிநயா, மாவட்ட மைய நூலக அலுவலர் விஜயகுமார், மற்றும் மைய நூலகம் முதல் நிலை நூலகர் பாலசுப்பிரமணியம், மாவட்ட நூலக அலுவலர் விஜயகுமார், ஜென்னிஸ் அறக்கட்டளை நிறுவனர் கர்லின் எபி, சேலத்து பாரதி சொல்லரசர், ரவி ராஜன் இளையராஜா, மற்றும் மைய நூலக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?






