வேலூர்:
சோழவரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
வேலூர் மாவட்டம் அமிர்தி அருகேயுள்ள சோழவரம் கிராமத்தில் பாரம்பரிய தமிழர் விளையாட்டான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை,சேலம் கள்ளக்குறிச்சி,
உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டி துவங்கும் இடத்திலிருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் மின்னல் போல் சீறிப்பாய்ந்து ஓடியது மக்கள் கண்டு ரசித்தனர்.
இதில் குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சியாக போட்டியை கண்டு ரசித்தனர்.