பெயர் விலாசம் தெரியாதவர் மரணம்... நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்...!
பெயர் விலாசம் தெரியாதவர் மரணம்... நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்...!

திருச்சி:
திருச்சி அண்ணாசிலை அருகே பெயர் விலாசம் தெரியாத சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரிக்கையில், இறந்த நபர் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. அவர் சில காலமாக அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டு பகல் நேரங்களில் யாசகம் பெற்றும், இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் பூட்டியுள்ள கடைகளுக்கு முன்பாக படுத்துக்கொள்வார் என தெரியவந்துள்ளது. மேற்படி நபர் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், உடலை யாரும் உரிமை கோரவில்லை.
உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில், கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முன்னிலையில் யோகா ஆசிரியர் விஜயகுமார் பெயர் விலாசம் தெரியாத பிரேதத்திற்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.
What's Your Reaction?






