மதுரை:
அடுத்த தலைமுறையை பாதுகாப்பது அரசியல்வாதியின் கடமை :மதுரை ரோட்டரி சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரையில் பாரமௌன்ட் ரோட்டரி வாகை 3000 ரோட்டரி சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,அடுத்த தலைமுறையை பாதுகாப்பது அரசியல்வாதியின் கடமை என்றார்.அவர் பேசும் போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குறுகிய காலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரம் செல்ல இருந்த நிலையில் விமானப் பயணத்தை ரத்து செய்து விட்டு இந்த நிகழ்வில் பங்கேற்கிறேன்.இந்த ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆளுநரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அரசு சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தப்படும் சமுதாய வளைகாப்பில் அரசு வழங்கும் பெட்டகத்துடன் கூடுதல் பொருட்களை ரோட்டரி சங்கம் சார்பில் வழங்குவதாக கூறினார்.உண்மையில் இந்தப்பணி எனக்கு பிடித்த பணியாகும்.
நான் நிதி அமைச்சராக இருந்த போது அவசர அவசரமாக அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனக்கு அழைப்பு வந்தது .நான் உடனே ஜி எஸ் டி கவுன்சில் நடத்தும் அறிவிப்பை அதன் கருத்துருவை குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்பாவது தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.அந்த கோரிக்கை அதன்பின்னர் நிறைவேற்றப்பட்டது.அவசரமாக கூட்டப்பட்ட ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லாமல் எனது தொகுதியில் அரசு சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பிற்கு சென்றேன்.உடனே அரசியல் எதிரிகள் எனது சொந்தர்காரர்களின் வளைகாப்பிற்கு நான் சென்று விட்டதாக கூறி அவதூறு பரப்பியதோடு வளைகாப்பு அமைச்சர் என கிண்டலும் செய்தார்கள். ஆனால் எதிர் கால தலைமுறையை பாதுகாக்கும் அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றதால் வளைகாப்பு அமைச்சர் என்ற பெயர் கிடைத்ததை நான் பெருமையாகவே கருதுகிறேன் என குறிப்பிட்டேன். அதன் படி இங்கு ரோட்டரி கிளப் சார்பில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதிகளும் அரசு பள்ளிகளில் நிறைவேற்றி தருவதாக குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி,விழா தலைவர் ரோட்டரி ராமநாதன்,செயலாளர் முருகானந்த பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அமைச்சரை சந்தித்து பேசினார்.