ரயில் பயணத்தின்போது வழி தவறிய குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு..
ரயில் பயணத்தின்போது வழி தவறிய குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு..

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் வழி,புகையிலைப்பட்டி மடுர் செல்வி கவிஸ்ரீ / வயது 7 என்பவர் தனது தந்தை மகாலிங்கம் மற்றும் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ராமேஸ்வரம்_திருப்பதி ரயிலில் ஊருக்கு திரும்பும்போது இரவு 2.30 மணியளவில் கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது தவறுதலாக சிறுமி கீழிறங்கி விட்டார்.அந்த சமயம் ரயில் கிளம்ப சிறுமி குடும்பத்தை விட்டு பிரிந்து அழுதபடி நின்றிருந்தார்..அந்த சமயம் பணியிலிருந்த தலைமை காவலர் ஜெகன்,2 ம் நிலை பெண் காவலர் ரேவதி ஆகியோர் குழந்தையை ரயில் நிலைய காவலர் அறைக்கு அழைத்து வந்து விசாரிக்கயில் சிறுமி தனது தந்தையின் செல்போன் நம்பரை கூற அவரை அழைத்து பத்திரமாக தலைமை காவலர் உஷா தந்தையிடம் ஒப்படைத்தார்...
What's Your Reaction?






