தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா...!

தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா...!

Mar 5, 2025 - 12:02
 0  2
தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா...!

சென்னை: 
சென்னை பல்லாவரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டமும் நிர்வாகிகள் அறிமுகவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. 

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர், இதை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் ( www.tnfcc.in) என்கின்ற  வணிகர்களுக்கான இணையதளம் வெளியிடப்பட்டன.  இந்த இணையதளம்  மூலமாக வணிகர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம் என்றும் வணிகர் சங்கங்களும் இதன் மூலமாக கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பானது தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களை   ஒன்றிணைத்து வணிகர்களின் நலனில் அக்கறைக் கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பது  மற்றும்  அரசு மூலம் கிடைக்கும் அனைத்து  சலுகைகளையும் கொண்டு சேர்ப்பது,   வணிகர்களுக்கு  நல்லதோர் தோழனாய் இந்த கூட்டமைப்பு  செயல்படும் என்றும் அதில் புதியதாக தொழில் முனைவோர்க்கு தேவையான தகுந்த  ஆலோசனைகள் வழங்கி அவர்களை தொழில் தொடங்க வைப்பது போன்ற பல்வேறு நற்செயல்கள் மூலம் வணிகர்களின் நன்மைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்  இந்த கூட்டமைப்பு முன்நின்று செயல்படுத்தும் என்று இக்கூட்டமைப்பின் மாநில தலைவர் டாக்டர்.ஶ்ரீனிவாசன் தெரிவித்தார்.

இந்த மாபெரும் கூட்டமைப்பின்  நிர்வாகிகளாக  மாநிலதலைவர்.ஶ்ரீனிவாசன்,  மாநில பொதுசெயலாளர் குகன், மாநில பொருளார் புதியசெல்வம், மாநில சட்டஆலோசகர் பாலாஜி, மாநில முதன்மை செயலாளர் காளிமுத்து, மாநில துணைத்தலைவர் அப்துல்லா, மாநில துணைத்தலைவர் சிராஜீதின், மாநில நிர்வாககுழு உறுப்பினர்கள் சித்ரா, சங்கரி, ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow