சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதை தடுக்க தஞ்சை மாநகராட்சி சார்பில் அலாரம் வைக்கப்பட்டுள்ளது...

சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதை தடுக்க தஞ்சை மாநகராட்சி சார்பில் அலாரம் வைக்கப்பட்டுள்ளது...

Jan 7, 2025 - 18:20
 0  29
சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதை தடுக்க தஞ்சை மாநகராட்சி சார்பில் அலாரம் வைக்கப்பட்டுள்ளது...

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

 இந்த புதிய பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதற்கு இலவச கழிப்பறைகளும் கட்டண கழிப்பறைகளும் அமைந்துள்ளது.

இருந்த போதிலும் ஆங்காங்கே சிலர் பேருந்துகள் நிற்கும் சாலை ஓரமாகவும் கழிவுநீர் ஓடும் பாதையிலும் சிறுநீர் கழித்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதை தடுக்கும் வகையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதை தடுக்கும் விதத்தில் மாநகராட்சி சார்பில் முதல்முறையாக அலாரம் அமைக்கப்பட்டுள்ளது.யாரேனும் தடுப்புகள் அருகில் சென்றால் அலாரம் அடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow