பழனி நகர் மன்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டிய பெண் கவுன்சிலர்

பழனி நகர் மன்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டிய பெண் கவுன்சிலர்

Jan 1, 2025 - 16:30
Jan 1, 2025 - 16:31
 0  8
பழனி நகர் மன்ற கூட்டத்தில்  அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டிய பெண் கவுன்சிலர்
பழனி நகர் மன்ற கூட்டத்தில்  அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டிய பெண் கவுன்சிலர்

பழனி நகர் மன்ற கூட்டத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டிய பெண் கவுன்சிலரால் பரபரப்பு. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் நகர் மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டம் முடியும் தருவாயில் 25வது வார்டு அதிமுக பெண் கவுன்சிலரான ஜெனத்துல் பிர்தோஷ், சென்னை அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நடைபெற்ற பாலியல் துண்புறுத்தல் சம்பவத்தை கண்டித்தார். தொடர்ந்து அச்சம்பவம் குறித்து பேசியபோது திமுக கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் உமா மகேஷ்வரி கூட்டம் முடிந்ததாக அறிவித்தார். இதை அடுத்து தேசியகீதம் பாடிய போது அதிமுக பெண் கவுன்சிலர் கருப்பு துணியால் தனது கண்களைக் கட்டிக் கொண்டு நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உடனே நகர மன்ற தலைவர் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி வெளியே சென்று விட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow