அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாராளுமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சோழவந்தான் தொகுதி சதிஷ்கண்ணன் அவர்கள் தலைமையில் மதுரை மாநகர் செயலாளர் காளிதாஸ் அவர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டல தலைவர் சுரேஷ், மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜா, மற்றும் மதுரை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சோழராஜா, உசிலை ஒன்றிய செயலாளர் சரவணன், மகளிர் அணி நிர்வாகிகள் மகாலட்சுமி, மீனா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இறுதியாக மதுரை மாநகர் 45வது வட்ட செயலாளர் கனியபெருமாள் அவர்கள் நன்றி உரை கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






