கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76- வது குடியரசு தின விழா...
கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76- வது குடியரசு தின விழா...

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76- வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளரும், கல்லூரி குழு தலைவருமான சி. குருமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மேலாளர் இரா. கணேசன் கூட்டுறவு சார்பதிவாளர் அன்பரசு, உதவி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






