அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு...

Jan 2, 2025 - 16:52
 0  11
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு...
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அவனியாபுரம் திருப்பரங்குன்றம் செல்லும் சாலைகள் நடைபெற்றது அதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கூறியதாவுது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசளிக்க விரும்புபவர்கள் பரிசளிக்கலாம். உள்ளூர் மாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எல்லாம் ஆன்லைன் தான்.. 
பரிசளிப்பதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் 3000 பேருக்கு தான் டோக்கன் கிடைக்கும் ஒன்பதாயிரம் பேருக்கு கிடைக்காது.
ஜல்லிக்கட்டு போட்டியில் எந்த குறையும், எந்த பாகுபாடும் இருக்காது.
அவனியாபுரத்தில் அனைத்து கமிட்டியும் ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்து இருந்தால் நிரந்தர வாடிவாசல் அமைப்பதற்கு அரசு தயாராக உள்ளது. மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த பிறகு அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் தனியார் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் மாமதுரை சார்பாக வரும் 18,19ஆம் தேதி பலூன் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்று கூறினார் . 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow