ஆற்காட்டில் மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு மன்றம் அலுவலக திறப்பு விழா..!
ஆற்காட்டில் மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு மன்றம் அலுவலக திறப்பு விழா..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு மன்றம் அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கராத்தே M.B.அதில் பாஷா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ஜபருல்லா ஷெரிப் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் அஸ்வாக் அலி, மாவட்டச் செயலாளர் சர்பராஸ் அகமது, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநிலத் தலைவர் ஜபருல்லா ஷெரிப் பேசுகையில் மனித உரிமைகளுக்கு எதிரான எந்த வித பிரச்சினையாக இருந்தாலும் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் இதற்காகவே அலுவலகம் முன்பு புகார் பெட்டி வைத்துள்ளதாகவும் புகார் அளித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். மாவட்டச் செயலாளராக பாரத் மற்றும் மாவட்டத் துணைத் தலைவராக எழிலரசி ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இதில் மனித உரிமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






