கல்வி இன்டர்நேஷனல் பள்ளியில் Mobicip இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு இயக்கம் – 12 மாணவர்கள் நேரடியாக தேர்வு...

கல்வி இன்டர்நேஷனல் பள்ளியில் Mobicip இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு இயக்கம் – 12 மாணவர்கள் நேரடியாக தேர்வு...

Mar 17, 2025 - 13:00
 0  12
கல்வி இன்டர்நேஷனல் பள்ளியில் Mobicip இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு இயக்கம் – 12 மாணவர்கள் நேரடியாக தேர்வு...

மதுரை:

கல்வி இன்டர்நேஷனல் பள்ளியில் Mobicip இணைந்து நடைபெற்ற வேலைவாய்ப்பு இயக்கம் – 12 மாணவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்வி குழுமத்தின், கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Mobicip உடன் இணைந்து வேலைவாய்ப்பு இயக்கம் (Placement Drive) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 12 மாணவர்கள் Mobicip நிறுவனத்திலிருந்து நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, அன்றே வேலைவாய்ப்பு ஆணை பெற்றனர்.
இந்த நிகழ்வை கல்வி குழுமத்தின் தலைவர் Dr. செந்தில்குமார் தலைமையேற்று நடத்தினார். Mobicip நிறுவனத்தின் Founder & CEO சுரேன் ராமசுப்பு மற்றும் Co-founder & CTO பிரதீப் அதிபதி ஆகியோர், நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள (HR) நிபுணர்களுடன் நிகழ்வில் பங்கேற்றனர்.
பள்ளியின் மாணவர்களுக்கு சர்வதேச வேலை வாய்ப்பு!
இந்த Placement Drive மூலம், பள்ளி மாணவர்களே நேரடியாக அமெரிக்கா தலைமையிடமாக கொண்ட Mobicip நிறுவனத்தால் தேர்வு செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
இவ்வமைப்பின் மூலம் மாணவர்களுக்கு Software Development, Artificial Intelligence (AI), Web Development, App Development, Tech Support போன்ற துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அமேரிக்காவில் இயங்கும் Mobicip நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது.
நிறுவனங்களின் பாராட்டு!
நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கி Mobicip நிறுவனத்தின் நிர்வாகம்,
"இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தின் மூலம் திறமைமிக்க மாணவர்களை அடையாளம் காண முடிந்தது. சர்வதேச தரத்தில் தொழில்நுட்ப கல்வியை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை, இளம் தலைமுறையினருக்கு வழங்க கல்வி குழுமம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது" என்று தெரிவித்தனர்.

கல்வி குழுமத்தின் தலைவர் கருத்து - Dr. செந்தில்குமார்
"கல்வியின் தரத்தை உலகளவியத்துக்கு உயர்த்தும் வகையில், நாங்கள் பல சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்க பாடுபட்டு வருகிறோம். Mobicip நிறுவனத்துடன் இணைந்து இந்த Placement Drive நடத்தியதற்கு பெருமைப்படுகிறோம். இது மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு புதிய வரலாற்று மைல்கல்!" என்று தெரிவித்துள்ளார்.
பள்ளியின் பெருமை மிகு தருணம்!
இந்த நிகழ்வு, கல்வி குழுமத்தின் மாணவர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் மூலம் நேரடியாக வேலைவாய்ப்பு கிடைத்த முதல் முயற்சி என்பதுடன், மாணவர்களின் திறமையை சர்வதேச மண்டலத்தில் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்பதற்கும் அடையாளமாக அமைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow