ஆதித்தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்கம் பேரவைக் கூட்டம்...

ஆதித்தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்கம் பேரவைக் கூட்டம்...

Jan 6, 2025 - 16:46
 0  5
ஆதித்தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்கம் பேரவைக் கூட்டம்...

மதுரை:

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், ஆதித்தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொதுநலச்சங்கம் சார்பில், சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், துணைச் செயலாளர் மகாலெட்சுமி வரவேற்று பேசினார். ஆலோசகர் சூரியா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்விற்கு தலைவர் முத்து ராணி தலைமை தாங்கினார். பாரப்பத்தி கிளைத் தலைவர் அழகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

செயலாளர் பிரேமா ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் விமலா நிதியறிக்கை வாசித்தார். தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் பிரியா மற்றும் பொருளாளர் 
அழகுராணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும், ஆதித்தமிழர் சங்கம் ஆலோசகர் நாக மகேஸ்வரி தீர்மானம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியாக துணைத் தலைவர் பஞ்சவர்ணம் நன்றி கூறினார். கூட்டத்தில் மதுரை தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், 2025 ஆம் ஆண்டு முடிவில் குறைந்தது 1,000 பேர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். 200 நபர்களாவது நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டும். 50 கிளைச்சங்க ஊர்களில் சங்கப் பெயர் பலகை வைக்கப்பட்டு விழாவாக கொண்டாட வேண்டும். குறைந்தது 30 கிளைகளில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு 30 பேர் புதிய தொழிலில் ஈடுபட வேண்டும். பணியிடத்தில் பாலின தொந்தரவு மற்றும் வன்முறைகளை ஒழிக்க தொடர்ந்து அரசை வலியுறுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும். நலவாரியத்தில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமமான நலத்திட்ட உதவிகள் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow