வேலூரில் திருவள்ளூவர் சிலை முன்பு விவசாயி ஒருவர் காதில் பூ வைத்துக்கொண்டு அரைநிர்வாணத்துடன் புத்தாண்டு தினத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளூவர் சிலை முன்பு சோழவரம் பாப்பான் தோப்பு பகுதியை சேர்ந்த ஜெய்சாமி என்ற விவசாயி காதில் பூ வைத்துக்கொண்டு, பாத்திரத்தில் மண்ணை வைத்து அதில் நெல்பயிர்களை வைத்து அரைநிர்வாணத்துடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டர்.
இதுகுறித்து ஜெய்சாமி கூறுகையில் "கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளில் இருந்து மண் எடுத்துவந்து காட்டுப்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட் பாப்பான் தோப்பு கிராமத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வீட்டு மனைகளை அமைக்கிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் 50 அடி அகலத்திற்கு 120 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஏரி மண்ணை கொண்டு வந்து நிரப்புகிறார்கள்.
இந்த மண் அரசாங்கம் சார்பில் உழவர்களுக்கும், மண்பாண்டம் செய்வத்கும் மட்டும் தான் அறிவித்தார்கள். ஆனால் சிலர் முறைகேடாக ஆயிரம் லோடுகளுக்கு மேல் லாரிகளில் கொண்டு வந்து பதுக்கி வைத்துள்ளார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே பதுக்கி வைத்துள்ள மண்ணை விவசாய உபயோகத்திற்கு வழங்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விவசாயி ஜெய்சாமியிடம் விசாரணை மேற்கொண்டு சமரசம் செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அனுமதி பெறாமல் பொது இடங்களில் இதுபோன்று தர்ணா போராட்டம் நடத்துக்கூடாது. உங்கள் கோரிக்கை குறித்து கலெக்டர், தாலுகா அலுவலகத்தில் புகார் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.