தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி ரெங்கா நகரில் ஸ்ரீ ரெங்கா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் புதியதாக கட்டபட்டுள்ள ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவிலில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த திருக்கோவிலுக்கு இமயமலை, காசி, ராமேஸ்வரம், நாசரேத், சுருளி தீர்த்தம் உள்ளிட்ட 48 புண்ணிய தலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தில் ஆண்டிபட்டியை சேர்ந்த கும்பாபிஷேக சர்வ சாதகரும், கிராம புரோகிதருமான ரவி அய்யர் தலைமையில் விக்னேஷ்வர பூஜை, கும்ப அலங்காரம், கல சஸ்தாபனம், புண்ணிய வாகனம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, சகல தேவாதி ஹோமங்கள், யாக வேள்வி துவக்கம், பந்தானம் மஹா பூர்ணாகுதி கடம், யஜமானர் ஆசீர்வாதம் உள்பட பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், வர்த்தக முக்கியஸ்தர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவையுடன் மாபெரும் சிறப்பு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியை ஸ்ரீ ரெங்கா ரியல் எஸ்டேட் பங்குதாரர்கள் சின்னன், நல்ல மாயன் மற்றும் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் பங்குதாரர்கள் கூறுகையில் ஸ்ரீ ரெங்கா நகர் வீட்டு மனையில் நல்ல குடிநீர், பிரதான சாலை, கழிவு நீர் வாய்க்கால்,சோலார் தெரு விளக்குள், வீடு கட்டுவதற்கு வங்கி மூலம் கடன் பெற்று தருதல் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறினர்.