கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா கடந்த நேற்று மதுரையில் உள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ்மொழி ஆய்வகத்தை பிரபல இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், மற்றும் தமிழ் ஆர்வலரான பேராசிரியர் முனைவர் மதன் கார்க்கி துவக்கி வைத்தார். தமிழ் மொழியின் பண்பாடு, வரலாறு, இலக்கியம் மற்றும் காலத்தினூடான வளர்ச்சியை மாணவர்கள் ஆராயும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம், தமிழ்மொழியின் சிறப்புகளை தொடர்ந்து கற்றுக் கொடுக்க ஓர் முக்கிய தளமாக இருக்கும். துவக்கவிழாவில் உரையாற்றிய பேராசிரியர் முனைவர் மதன் கார்க்கி, மாணவர்களிடையே தமிழ்மொழியின் புகழை எடுத்துரைத்து, “இளைய தலைமுறையின் தமிழ் தொடர்பு பந்தத்தை மேம்படுத்தும் இடமாக இந்த ஆய்வகம் அமையும்” எனக் குறிப்பிட்டார். Subemy Subtitling Services நிறுவனத்தாரும், பாட்காஸ்டருமான நந்தினி கார்க்கி விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். Silverzone நிறுவன தலைமை செயலாளர் பங்கஜ் காலோட் அவர்களின் உரை வணிக துறையிலும் தமிழின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தவாறு, கல்வி சர்வதேச பொதுப்பள்ளி நிறுவனத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் சுப்பிரமணியன், அவர்களின் மனைவி கண்மணி செந்தில்குமார், மற்றும் கல்வி குழும பள்ளிகளின் தாளாளர் குமரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில், நன்றியுரையை பள்ளி முதல்வர் திருமதி. அருணா வழங்கினார். நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய துணை முதல்வர் திருமதி. அபிராமி உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.