தமிழகம் முழுவதும் பெண்கள் மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

தமிழகம் முழுவதும் பெண்கள் மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

Jan 6, 2025 - 17:47
 0  7
தமிழகம் முழுவதும் பெண்கள் மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

திருச்சி:

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பெண்கள் மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கிட வலியுறுத்தியும் பொங்கல் பரிசு தொகப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும் மலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கவும் போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிக தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமை தாங்கினார். 

மாநகர் மாவட்ட துணை செயலாளர் பிரீத்தா விஜய் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார், மகளிர் அணி செயலாளர் இந்துமதி மகளிர் அணி துணை செயலாளர் பெரியக்கா வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கழக ஐடிவிங் செயலாளர் செந்தில்குமார் கழக  தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது,  தொழிற்சங்கம் திருப்பதி , மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் வி கே ஜெயராமன்,  பொருளாளர் மில்டன் குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow