சேதமடைந்த சாலையால் பெண் ஒருவர் பலி... சாலையை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை..!!
சேதமடைந்த சாலையால் பெண் ஒருவர் பலி... சாலையை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை..!!
திண்டுக்கல்:
பழனி கோவை தேசிய நெடுஞ்சாலையில் வண்டி வாய்க்கால் என்ற பகுதியில் மழை காலத்தில் சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், நேற்று முன் தினம் பெண் ஒருவர் பலியான நிலையில் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவை தேசிய நெடுஞ்சாலையில் அ.கலையமுத்தூர் ஊராட்சி அலுவலகம் எதிரே வண்டி வாய்க்கால் என்னும் இடத்தில் சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகள் மிகவும் குண்டும் குழியும் காணபடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குவுள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி தொடரும் விபத்தால் உயிர் பலி வாங்கி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் தைப்பூசம் திருவிழா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தர உள்ள நிலையில் சாலை சேதமடைந்து உள்ளதால் ,தொடர் விபத்துக்கள் நடந்து வருகின்றது. எனவே நேற்று முன் தினம் மாலை 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் ,மனைவி வண்டி வாய்க்கால் வழியே சென்று கொண்டிருந்தபோது குழியில் விழுந்ததில் பின்னால் வந்த தனியார் பேருந்து பெண் மீது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
எனவே தொடர் விபத்துக்களை ஏற்படுத்தும் இந்த சாலையை நெடுஞ்சாலைததுறை அதிகாரிகளும் ,மாவட்ட நிர்வாகமும் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






