மதுரை:
மன்னர் திருமலை நாயக்கரின் 442 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்ஜியம் கட்சி சார்பாக 101பால்குடம் எடுத்து வரப்பட்டு மாலை அணிவித்து மரியாதை.
திருமலை நாயக்கரின் 442-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராஜ்ஜியம் கட்சி சார்பாக மாநில தலைவர் பி.ஆர்.சிவசாமி ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமையில் 101பால்குடம் பேரணியாக எடுத்து வரப்பட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் அமைந்துள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராஜ்ஜியம் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.