வேலூர்:
வேலூர்மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து நலம் விசாரித்தார் - இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேட்டி.
வேலூர் அலமேலுரங்காபுரம் காட்பாடி பிரம்மபுரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் நீரிழிவு நோய் ரத்தகொதிப்பு,வாத நோய்,சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களை இனம் கண்டறிந்து சுகாதாரத்துறை சார்பில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கபடுகிறது அவர்களை மருத்துவமனைக்கும் அழைத்து சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளும் செய்யபடுகிறது இதனை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி சுகாதாரத்துறை இணை இயக்குநர் பரணிதரன் ஆகியோர் நேரடியாக நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் அலுமேலுரங்காபுரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்யப்பட்டனர் அதில் 1. 20 லட்சம் நபர்களுக்கு நோய்கள் கண்டறியப்பட்டது இதில் 15 ஆயிரம் பேர் மக்களை தேடி மருத்துவத்தில் அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கபடுகிறது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தோம் இம்மாவட்டத்தில் எச்.எம்.பிவி வைரஸ் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
மேலும் இந்த வைரசால் பாதிப்பு அதிகம் இருக்காது பொதுமக்கள் அச்சபட தேவையில்லை மாவட்டத்தில் ஆரம்பசுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரையில் எங்கும் மருந்து தட்டுபாடுகள் எதுவுமில்லைமக்களை தேடி மருத்துவம் மூலம் மலைவாழ் மக்கள் முதல் சமவெளி பகுதியில் வசிப்பவர்கள் வரையில் அனைத்துதரப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது போலி மருத்துவர்களை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் மருந்து தட்டுபாடு உள்ள மருத்துவமனைகளை குறிப்பிட்டு காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் சுகாதாரதுறையின் சார்பில் பள்ளிகளில் மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு நோய் கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு நோய்க்கான சிகிச்சைகளும் மருத்துவமனையில் அளிக்கபடுகிறது என்று கூறினார்.