வேலூர்:
வேலூரில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குற்றச்சாட்டு.
வேலூரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள ஓட்டேரி பேருந்து நிலையம் அருகாமையில் பள்ளிகள் மற்றும் கல்லூரி உள்ள இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன.
வேலைக்குச் செல்லும் தொழிலாளிகளும்பள்ளிகள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்பட்டு வருகின்றனர், சாலையை கடக்க முடியாமல் சிரமத்திற்க்கு ஆள்கின்றன.
மேலும் காவலர்கள் பணியில் இல்லாததால் வாகன ஓட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக சாலையை கடக்க முயற்சிப்பதின் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்தும், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி வாகன ஓட்டிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் செல்லும் நேரமான பீக் ஹவர் என செல்லப்படும் நேரத்தில் போக்குவரத்து மிகுந்து காணப்படும் நேரம், பள்ளி மற்றும் கல்லூரி நிறைந்த பகுதியான இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுவதில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை கூறுகின்றனர்.