வேலுரில் தமிழ்நாடு அளவிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது...
வேலுரில் தமிழ்நாடு அளவிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது...

வேலுரில் தமிழ்நாடு அளவிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் மற்றும் வேலூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சீனியர் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் நடைபெற்று வருகிறது.
இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டத்தை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட குத்துச் சண்டை வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
10-விதமான எடை பிரிவில் வீராங்கனைகள் போட்டியிடுகிறார்கள்.
இந்த போட்டியில் தேர்வாகும் 10 பேர் மாநில அளவில் தேர்வாகி தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். ஜனவரி 25- ம் தேதி போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற உள்ளனர்.
What's Your Reaction?






