வேலூர் கோட்டை மைதானம் முழுவதும் குப்பைகள் சூழ்ந்து உள்ளது அவற்றை விரைவில் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...

வேலூர் கோட்டை மைதானம் முழுவதும் குப்பைகள் சூழ்ந்து உள்ளது அவற்றை விரைவில் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...

Jan 4, 2025 - 11:55
Jan 4, 2025 - 12:02
 0  6
வேலூர் கோட்டை மைதானம் முழுவதும் குப்பைகள் சூழ்ந்து உள்ளது அவற்றை விரைவில் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...

வேலூர் மாவட்டம்:

புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற குப்பைகளால் வேலூர் கோட்டை மைதானம் முழுமையாக குப்பைகள் சூழ்ந்து காட்சியளிக்கிறது இந்த குப்பைகளை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம்.
2025 புத்தாண்டுடை கொண்டாடும் வகையில் வேலூர் கோட்டையில் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்
நேற்று காலை முதலே
வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்து புத்தாண்டை கொண்டாடினர்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர்ந்து வந்ததால், கடந்த ஒரு வாரமாக வேலூர் கோட்டையில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,
நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து கோட்டையை சுற்றிப்பார்த்து கோட்டை மைதானத்தில் அமர்ந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர் இந்த நிலையில் 
சுற்றுலா பயணிகளின் வருகையை தொடர்ந்து அந்த பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன அதேபோல் பொதுமக்களும் அவர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை கோட்டை மைதானத்தில் போட்டு சென்றதின் காரணமாக கோட்டை மைதானம் முழுவதும் குப்பை சூழ்ந்த மைதானமாக மாறி உள்ளது இதை உடனே அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow