அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்..!!

அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்..!!

Jan 10, 2025 - 16:03
 0  6
அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்..!!
வேலூர்:
வேலூரில் சாலையில் செல்பவர்களின் இதய துடிப்பை நிறுத்தும் அளவிற்கு அதிக ஒலி எழுப்பும் வகையில் பயன்படுத்தப்பட்ட காரையும் இருச்சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்ட 45 சைலன்சர்களையும் பறிமுதல் செய்துள்ளனர் வேலூர் போக்குவரத்து போலீசார்.
வேலூர் மாநகரில் நாளுக்குநாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லக்கூடிய நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில், வேலூர் மாநகரில் அண்மை காலமாக இளைஞர்கள் பலர், தங்களின் இருச்சக்கர வாகனங்களில் போக்குவரத்து விதியை மீறி அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி சாலையில் செல்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி, இதய வலி ஏற்படும் வகையில் இருச்சக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் இயக்கிய இளைஞர்களை பிடித்த போலீசார் சைலன்சர்களை பறிமுதல் செய்துள்ளனர். 

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், "வேலூரில் அதிவேகமாக இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்களை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் சில இளைஞர்கள் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பயன்படுத்துவதால் பிற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதைதடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி மதிவாணன் அறிவுறுத்தலின்பேரில் வாகன தணிக்கை செய்யப்பட்டதில் 45 இருச்சக்கர வாகன சைலன்சர்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பிய காரர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிக ஒலி எழுப்பக்கூடிய வகையிலான சைலன்சர்களை விற்கும் கடைகள் மீதும், அதை இருச்சக்கர வாகனத்தில் பொருத்தும் மெக்கானிக் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow