மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டண படுக்கை சிகிச்சை பிரிவில் ஒரு கோடி ரூபாய் வசூலித்து சாதனை: 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டண படுக்கை சிகிச்சை பிரிவில் ஒரு கோடி ரூபாய் வசூலித்து சாதனை: 

Jan 6, 2025 - 16:34
 0  45

மதுரை:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டண படுக்கை சிகிச்சைப் பிரிவுகள் விபத்து மற்றும் சிகிச்சைப்பிரிவில் 8 படுக்கைகளும்(4 Deluxe Room +4 single room), பன்நோக்கு உயர் சிகிச்சைப் பிரிவில் 8 (3 Deluxe Room +5 single room) படுக்கைகளுடன் கடந்த 2023 மார்ச் மாதம் 2-ம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

கட்டண படுக்கை சிகிச்சைப்பிரிவில் தற்போது வரை 919 நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் பயனடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாக இதுவரையில் Rs.1,01,35,200/- (ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சத்து முப்பத்தி ஐந்தாயிரத்து இருநுாறு ரூபாய்) படுக்கை கட்டணமாக பெறப்பட்டுள்ளது. இச்சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு அறைகளிலும் உள்ள குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி, மெத்திருக்கைகளுடன் கூடிய இருக்கைகள், சுடுதண்ணீர்(water Heater) மற்றும் R.O. Water வசதிகளுக்காக மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதர மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், சிகிச்சைகளுக்கு தனிக் கட்டணம் ஏதும் கிடையாது. அரசு ராஜாஜிமருத்துவமனை முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நிலைய மருத்துவர் நேரடி மேற்பார்வையில் கட்டண படுக்கை சிகிச்சைப்பிரிவு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow