கால்நடை அடைக்கும் பட்டியின் இடத்தை திமிரி கோட்டை தொடக்கப் பள்ளிக்கு வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு...
கால்நடை அடைக்கும் பட்டியின் இடத்தை திமிரி கோட்டை தொடக்கப் பள்ளிக்கு வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு...

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. திமிரி பேரூராட்சி ஆரணி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் நெடுஞ்சாலையில் செல்வதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர்.
மேலும், அரசுப் பள்ளி நெடுஞ்சாலையில் உள்ளதால் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். திமிரி கோட்டையில் 2012 ம் ஆண்டு முதல் ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட வேண்டி பலமுறை வருவாய்த் துறை அதிகாரிகளிடம், மனுவும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், திமிரி பேரூராட்சி கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ள இந்த இடம் கால்நடை அடைக்கும் பட்டி உள்ளதால் வருவாய் துறையினருக்கு சொந்தமான இடத்தை திமிரி கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஆற்காடு தாசில்தாரிடம் மனு அளித்திருந்தனர்.
பட்ட பெயர் மாற்றம் கேட்டு மனு அளித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவை சந்தித்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக கால்நடை அடைக்கும் பட்டியின் இடத்தின் பட்டா பெயரை கல்வி கற்க மாணவர்களின் எதிர்காலத்தை கருதி கல்வித் துறைக்கு வழங்குமாறு கங்காரம் சாமி மடம் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், மனு அளித்தார்.
What's Your Reaction?






